Frequently Asked Questions

எல்லோரும் மருந்துகளை சாப்பிடலாமா?

உங்களுக்கு காய்ச்சல் போன்ற மற்ற பிரச்சினைகளுக்கு மருந்து சாப்பிடும் போது, எங்களது மருந்துகளை சேர்ந்து சாப்பிடலாம். இன்ஜெக்சன் போட்டு கொள்ளலாம். மேலும் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இருதய நோய், ஆஞ்சியோ சிகிச்சை செய்தவர்கள், கொலஸ்டிரால், ஆஸ்துமா, மனநோய், வலிப்பு நோய், தைராய்டு மேலும் ஆங்கில மருந்துகளை தினமும் எடுத்துக் கொள்கிறவர்களும் நாங்கள் கொடுக்கும் மருந்துகளை சேர்த்து சாப்பிடலாம்.

டீ, காபி, வாழைக்காய், இனிப்பு வகைகள், ஆட்டுக்கறி சாப்பிடலாமா?

சாப்பிடலாம். ஆட்டுக்கறி வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வது நல்லது.

ஷாம்பு, சோப் போட்டு குளிக்கலாமா?

நீங்கள் விருப்பம் போல் குளிக்கலாம். உள்ளங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் சலவை சோப்புகளை உபயோகிக்கும் போது கைஉறை பயன்படுத்த வேண்டும். உள்ளங்கால்களில் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக செருப்பு உபயோகித்துக் கொள்ளவும். நீங்கள் உபயோகப்படுத்தும் பாத்ரூம் மற்றும் கழிவறை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். உலர்ந்த தோலை நீங்களாக உரிக்க வேண்டாம். தானாக உதிர்த்துவிடும்.

ஆங்கில மருந்துகள், ஆயின்மெண்டுகள் உபயோகிப்பது, அரிப்புக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் உங்களுடைய இயற்கை மூலிகை மருந்துகளை சேர்த்து சாப்பிடலாமா?

கண்டிப்பாக சாப்பிடலாம். ஆங்கில மருந்துகளை உடனே நிறுத்த வேண்டாம். ஏனென்றால், அலோபதி மருந்துகள் உங்களை நோயை கட்டுப்படுத்த மட்டுமே செய்யும். முழுமையாக குணமாகாது. மருந்துகளை உடனே நிறுத்தினால் அரிப்பு மற்றும் நோயின் தாக்கம் அதிகரிக்கும். எங்களது மருந்துகளை ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளும் போது ஆங்கில மருந்துகளையும் சேர்த்து உபயோகிக்கலாம். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எங்களது இயற்கை மருந்துகளால் நோய் படிப்படியாக குணமாகும் போது நீங்கள் உபயோகித்து கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளை படிப்படியாக நிறுத்தி விடலாம். நோய் முழுமையாக, முற்றிலும், நிரந்தரமாக குணமான பின் எங்களது மருந்துகளை விட்டு விடலாம். மீண்டும் வராது.

நோய் அதிகரிக்க என்ன காரணம் ?

அதிக டென்சன், கவலையினாலும், அதிக அளவு மது அருந்துவதினாலும், அதிகளவு சூடான மற்றும் குளிரான காலங்களிலும், தூசு மற்றும் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நோயின் தாக்கம் ஒரு சிலருக்கு அதிகமாகும். முற்றிலும் குணமான பின்பு குளிர்காலத்தில் மீண்டும் சொரியாசிஸ் தோல் நோய் வராது.

மது, புகைப்பழக்கம் உள்ளவர்கள் மருந்தை எடுத்துக் கொள்ளலாமா?

சாப்பிடலாம். மது அருந்தும் நேரங்களில் மட்டும் எங்களது மருந்துகளை சாப்பிட வேண்டாம்.

தோல் நோயை பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா?

பரிசோதனைகள் செய்ய தேவையில்லை. முழு உடல் பரிசோதனை செய்தாலும் சாதாரணமாக தோன்றும்.

தோல் நோயின் அரிப்பு அதிகமாக இருப்பவர்கள் செய்ய வேண்டியது...?

வாரத்திற்கு இருமுறை நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அரிப்பு வரும் போது எந்த காரணத்தை கொண்டும் சொறிய கூடாது. சொரிந்தால் நோயின் பாதிப்பு அதிகமாக எரிச்சல், வலி ஏற்படும். கட்டுப்படுத்த முடியாத அரிப்பு இருந்தால் விரல்களால் மெதுவாக தேய்த்து விடுவது நல்லது. அரிப்புகளில் செக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்

சொரியாசிஸ் நோய்க்கு எத்தனை மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்?

நோயின் பாதிப்புக்கு தக்கவாறு குணமடையும். ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கு ஓரிரு மாத சிகிச்சையிலேயே முழுமையாக குணமடையும். உங்களது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும்; மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப நோய் பாதிப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு 4/6/10 மாதங்கள் வரை சிகிச்சை தேவைப்படும். குணமாக பின்பு மீண்டும் வாழ்நாளில் வராது.

பத்தியம் எதுவும் கடைபிடிக்க வேண்டுமா?

கருவாடு, கத்தரிக்காய் சாப்பிடாமல் இருந்தால் நோய் விரைவில் குணமாகும். ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். மருந்து சாப்பிடும் போது இதையெல்லாமல் சாப்பிடும் போது பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. நோய் முழுமையாக குணமடைய கொஞ்சம் காலதாமதம் ஏற்படும்.

சிகிச்சை பெற்றும் குணமாகாமல் போவதற்காக காரணம் என்ன?

ஒரு மாதம் மருந்து சாப்பிட்டு நோய் அறிகுறி குறைந்தவுடன் தானாகவே டாக்டர் கூறிய மாதம் வரை தொடர்ந்து சாப்பிடாமல் இடையில் மருந்தை நிறுத்தினாலோ, நோய் அதிகமாகும் போது மட்டும் மீண்டும் மருந்து எடுத்து கொள்வது போன்ற காரணங்களினால் நோய் குணமாகாமல் போகலாம். சொரியாசிஸ் தோல் நோய் குணமாகும் வரை எங்களது மருந்துகளை சாப்பிட வேண்டும். முற்றிலும் குணமான பின்பு டாக்டரின் ஆலோசனையின் படி படிப்படியாக மருந்துகளை நிறுத்த வேண்டும்.